மாதேஸ்வரன் மலையை நோக்கி ஜீப் சென்று கொண்டிருந்தது. பின்னால் அம்பாசடர் கார்.ஜீப்பிலிருந்த ஐந்து பேரும் ஆயுதபாணிகள்.
மைசூரில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 150 கிலோ மீட்டர். காரில் இருந்தவர் எஸ்.பி.
பெயர் கோபால கிருஷ்ணன். இவரை பிபின் கோபால கிருஷ்ணன் என்று சொன்னால்தான் கர்நாடக போலீஸ் துறைக்கு தெரியும்.
நேர்மையான,தைரியமான அதிகாரி .கை நீட்டமாட்டார் !
ஜீப்பிலிருந்த மற்ற ஐந்து பேரும் சப் இன்ஸ்பெக்டர்கள்.
பாரஸ்ட் கார்டுகள் பசவய்யா ,சிவனய்யா இருவரையும் வீரப்பன் சித்ரவதை செய்து அனுப்பியிருந்ததை மிகப்பெரிய அவமானமாக கருதினார் முதலமைச்சர்.
சீப் செக்ரட்டரி,, டி.ஜி.பி. இப்படி தலைமைப் பொறுப்பில் இருந்த அனைவரையும் ரவுண்டு கட்டி விட்டார்.
“சி.எம்.சொன்னதில் எந்த தப்புமில்ல.ஒரு பிக்பாக்கட்காரனை போலீஸ்காரனால் பிடிக்க முடியலேன்னா எவ்வளவு கேவலமோ அதே கேவலம்தான் இந்த காட்டுப்பன்னியை வேட்டையாட முடியலேன்றதும்!இந்த வீரப்பன் நாய் மட்டும் என் கைல மாட்டுச்சுன்னு வச்சுக்குங்க.நோ என்கொயரி! வாய்க்குள்ள பிஸ்டலை வச்சு ஒரே அமுக்கு!”
“சொன்னவர் மாதேஸ்வரன் மலை எஸ்.ஐ.தினேஷ்
வீரப்பனை வேட்டை ஆட அமைக்கப்பட்ட ஸ்பெஷல் டீமில் ஒருவர்.மாதேஸ்வரன் மலை ஏரியா எக்ஸ்பெர்ட்.இவரைத் தவிர நான்கு பேர் .மைசூர் எப்.2 போலீஸ் நிலைய எஸ்,ஐ,ராமலிங்கம். , வித்யாராணியபுரம் எஸ்.ஐ. ஜெகநாதன், கிருஷ்ணராஜபுர சந்திரப்பா ,கே.ஆர்.நகர கிருஷ்ணா அர்ஸ்.
இந்த ஐவரும் சலித்து எடுக்கப்பட்டவர்கள். திறமைசாலிகள். மன வலிமை உள்ளவர்கள். எத்தகைய அசாதாரண நிலையையும் சமாளிக்கக்கூடியவர்கள். பிபின் எப்பவோ போட்டு வைத்திருந்த கணக்கு வீரப்பனை பிடிப்பதற்காக பயன்பட்டது.
தினேஷ் ஆவேசப்பட்டதும் ஜெகநாத் அவரை அமைதிப்படுத்தி “இவன் விஷயத்தில் நாம் அவசரப்படக்கூடாது” என்று தட்டிக் கொடுத்தார்.
“ஏன் சார்?”
“இத்தனை வருசமா ஒருத்தன் நமக்கு மட்டுமல்ல.தமிழ்நாட்டு போலீசுக்கும் தண்ணி காட்டிக்கிட்டு வர்றான்னா அவன் இன்ப்ளுயன்ஸ் உள்ளவனாத்தான் இருப்பான். பொலிடிகல் இன்ப்ளுயன்ஸ் அவனை காப்பாத்திட்டிருக்கு!.இப்ப நாம்ப மாதேஸ்வரன் ஹில்சுக்கு போறது நமக்கு மட்டும்தான் தெரியும்னு நெனச்சிட்டிருக்கோம்.ஆனா அவனுக்கு இந்நேரம் நாம்ப வர்ற நியூஸ் போய் சேர்ந்திருக்கும்”என்று ஜெகநாத் சொல்ல அத்தனை பேருக்கும் அதிர்ச்சி!
“அப்படின்னா நமக்குள்ள பிளாக் ஷிப் இருக்கானுங்களா?”
“ஒய் நாட்? டவுன்ல இருக்கிற குவாரி ஓனர்ஸ் தான் வீரப்பனுக்கு பெரிய ஹெல்ப். குவாரி ஒர்க்கர்ஸ்லாம் அவனைத்தான் லீடரா நினைக்கிறாங்க!”
“ஒர்க்கர்ஸ்ல இருக்கிற சில பேர் வீரப்பனுக்கு தேவையான ரேஷன் கொண்டுபோய் கொடுக்கிறாங்க,பத்து கிலோ அரிசிக்கு ஆயிரம் ரூபாய், கூட கொடுத்திருக்கிறான் வீரப்பன். அவனை ஏன் தலைவனா ஏத்துக்கமாட்டங்க தினேஷ் ??
இப்படியாக வீரப்பனைப் பற்றிய சங்கதிகளை அலசியபடியே பயணம் செய்ததால் அவர்களுக்கு அலுப்புத் தெரியவில்ல.மைசூரில் புறப்பட்ட அவர்கள் மாதேஸ்வரன் மலை சாம்ராஜ் சப் டிவிஷன் எல்லையை அடைய ஐந்து மணி நேரம் ஆகியது.
நாளை …அதிரடி!