‘இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் பள்ளியிலிருந்து வந்த அன்புஜி இயக்கியுள்ள படத்தின் பெயர் ‘இருவர் ஒன்றானால்’ இப்படம் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’படம் வெளியாகும் அதே மே29-ல் வெளியாகவுள்ளது. ஏன் இந்த மோதல் முடிவு ! சூர்யாவையே மிரட்டும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில்? என இப்படத்தின் இயக்குனரிடம் கேட்ட போது,’காதல் …காதல்…காதல்… அந்தக் காதல் போயின்சாதல் என்றது அந்தக்காலம்.காதல் …காதல்…காதல்… அந்தக் காதல் போயின் இன்னொரு காதல் என்பது இந்தக்காலம்.
‘இந்தக் காதல்பற்றி நிறைய பொய்கள்,கற்பிதங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால் இன்றைய காதல் எப்படி உள்ளது.? என்று பலருக்கும் தெரிவதில்லை. காதல் புனிதமானது இல்லை. அசிங்கமானதும் இல்லை.காதல் என்பது ஓர் உணர்வு .அது ஒரு குறிப்பிட்ட வயதில் வரும். கண்டு கொள்ளாவிட்டால் அடுத்த இடத்துக்குப் போய்விடும் .இதுதான் இன்றைய காதலின் இயல்பு. இன்றைய இளையதலைமுறை இப்படித்தான் காதலை அணுகுகிறார்கள்.அப்படிப்பட்ட ஒரு நவீன காதலை மென்மையான காதலை நாகரிகமாகச் சொல்கிற படம்தான் ‘இருவர்’ ஒன்றானால்’ ” இப்படத்தின் கதை கல்லூரியின் பின்னணியில் நகர்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் பங்கேற்கும் படம் என்றுஇதைத் தைரியமாகக் கூறலாம். இது இயக்குநர் கதிரின் ஒருபடம் போல இளமை, கலர்ஃபுல், கலகலப்பு என எல்லாம் கொண்டதாக இருக்கும் .படத்தில் விரசமில்லை. காதலன் காதலி அணைப்பு காட்சிகள் கூட இல்லை.ஏன் காதலர்கள் தோளில் கை போடும் காட்சி கூட இல்லை. இது சினிமாவைப் புரடடிப் போடும் புதுமைப்படம் என்றெல்லாம் சொல்ல விரும்ப வில்லை இது ஒரு நம்பிக்கையான படம் என்பேன். அந்த நம்பிக்கை எண்ணத்தில்தான் இதை இப்போது வெளியிடுகிறோம்.”
என்கிறார் அன்புஜி.