அரசியல் தொல்லைகள்,சொந்தக்கட்சியினரின் பிச்சு,பிடுங்கல் இல்லாமல் வாழ்வது என்பது வரம்.
இந்தியாவின் மொத்த சுமையையும் தாங்கியாக வேண்டிய நிலையில் உள்ளவர் “ஆகா.நிம்மதிப்பா.இப்படியொரு படமா?நம்ம கலாசாரம் பண்பாடு, கிராமியம் எல்லாத்தையும் நல்லா எடுத்திருக்கீங்கப்பா”என்று பாராட்டினால் அதுதான் உண்மையானது. அவரது பணிச்சுமையை “சின்னபாபு’ என்கிற படம் குறைத்து ஆறுதலை அளித்திருக்கிறது என பொருள்!
பாராட்டியவர் குடியரசுத்துணைத் தலைவர் வெங்கையா நாயுடு!
சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம்தான் கடைக்குட்டி சிங்கம் .பாண்டிராஜ் இயக்கம்.சக்திவேலன் வெளியீடு. இந்தப்படம் தெலுங்கில் ‘சின்னபாபு ‘என்கிற பெயரில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
” கிராமத்து பசுமைப் பின்னணியில் நமது பழக்க வழக்கங்களை மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை ஆபாசம் இல்லாமல் காட்டியிருக்கிற நல்லபடம்”என பாராட்டி இருக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்.
பாயும் சிங்கக்குட்டி! பார்த்துங்க எலக்சனுக்கு கூப்பிடப் போறாங்க?