காட்டை விட்டு ஊருக்குள் நுழைந்த சிறுத்தை மாதிரி சென்னைக்கு வந்திருக்கிறார் ஸ்ரீ ரெட்டி.
“கஷ்டப்படுறேன்” என்று பாட்டில் பாட்டிலாக கண்ணீர் வடிக்கிற அந்த நடிகை காஸ்ட்லியான ஹோட்டலில் தங்க முடிகிறது என்றால் ஸ்பான்சர் யார் என்கிற கேள்வி எழாதா? யாரோ ஸ்ரீ ரெட்டிக்கு பின் பக்கமாக இருந்து கொண்டு கிள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது நோக்கம் தெரியவில்லை. ஆனால் இனிமேல் பேஸ்புக்கில் எழுதாமல் யூ டியூப் வழியாக ஸ்ரீ ரெட்டி பேசுவதற்கு ஏற்பாடு நடக்கிறது.
ஸ்ரீ ரெட்டியின் அடாவடியை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று நடிகர் விஷால் கூறி இருக்கிறார்.ஏனைய நடிகர்களுடன் பேசி முடிவெடுத்து இருக்கிறார், வழக்கா,போலீசா?என்பது தெரியவில்லை.