சென்னையில் அயனாவரத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.இச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.இந்நிலையில் காமக் கொடூரன்கள் 17 பேரும் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் ஜூலை 31 ந்தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் வழியில், நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதன் காரணமாக அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில்,இச் சம்பவம் குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டரில், ‘இந்த மிருகத்தனம் முடிவுக்கு வருமா? மைனரோ, மேஜரோ யாரை பலாத்காரம் செய்தாலும் மரண தண்டனை விதித்தால் தான் இது போன்ற மிருகங்களுக்கு பயம் வரும். இது போன்ற மிருகங்களால் பல உயிர்கள் போயுள்ளது. இது மாற்றத்திற்கான நேரம்’ என்று ட்விட்டரில் கொந்தளித்துள்ளார் வரலட்சுமி.