என்ன சாபமோ தெரியவில்லை.! சின்னத்திரை நடிகைகளின் துயரங்களுக்கு வடிகால் தூக்குக்கயிறு என்றாகி விட்டது. எத்தனையோ துன்பங்களைக் கடந்துதான் அவர்களுக்கு தகுந்த அந்தஸ்து கிடைக்கிறது. நடிகைகள் என்றாலே மன உளைச்சல் குடைச்சல்களுக்கு குறைவிருக்காது. பிரியங்காவுக்கு என்ன குறையோ?
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வம்சம், தெய்வமகள் ,ஆண்டாள் அழகர் இன்னும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். கணவருடன் பிரச்னை, குழந்தை இல்லையே என்கிற கவலை காரணமாக அந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. வளசரவாக்கம் வீட்டில் இன்று காலை வேலைக்காரப் பெண் தான் முதலில் பார்த்திருக்கிறாள்.