காலம் மாறி வருகிறது. படுக்கை அறை சம்பவங்களைக்கூட மஸ்லின் துணியால் போர்த்தி படம் எடுக்கிற காலம் இது. முரட்டுக்குத்து,இருட்டுக்குத்து என புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்தக் காலத்தில் போய் முத்தம் கொடுக்க மாட்டேன். இறுக அணைக்க மாட்டேன் என வீம்பு பண்ணினால்?
மடோனா செபாஸ்டின். விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் ஜுங்கா நடிகை.
இவர் சொல்கிறார் “லிப்-லாக் ,அல்லது அந்தரங்க நெருக்கம் உள்ள மூணு கதைகள் தமிழில் நடிக்கச் சொல்லி வாய்ப்புகள் வந்தன.மறுத்து விட்டேன். அத்தகைய கதைகள் எந்த மொழியில் வந்தாலும் நடிக்க மாட்டேன்” என்கிறார் மடோனா.