கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதன் முறையாக சிம்ரன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியான போது, அப்படியெல்லாம் இல்லீங்க, புதுசு புதுசாநீங்களா கற்பனை பண்ணி எழுதிகிட்டா எப்படி?என மறுப்பு அறிக்கை வாசித்தார் இயக்குனர். இந்நிலையில் தயாரிப்பு தரப்போ, தற்போது ரஜினியுடன் சிம்ரன் நடிக்கிறார் கூடவே பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கும் நடிக்கிறார் என்ற தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது, இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை சிம்ரனும் கலந்து கொண்டார். தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த ஷெடியூலில் ரஜினி, சிம்ரன், பாபி சிம்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளாராம் கார்த்திக் சுப்புராஜ்.இந்த படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, குருசோமசுந்தரம். தீபக் பரமேஷ் ஆகியோரும நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.