“வட மாநிலத்தவர்கள் வேலை வாய்ப்பு என்கிற பெயரில் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். அவர்களால் இன கலப்பு ஏற்படுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆர்ய -திராவிட கலப்புக்கு வழி வகுத்துவிடும்.”என அபாயமணி அடித்திருக்கிறார் யுரேகா. ‘காட்டுப்பய சார் இந்த காளி’ என்கிற படத்தை இயக்கி இருப்பவர்
இதில் நடித்து தயாரித்திருப்பவர் ஜெய்வந்த்.
படத்தின் முன்னோட்டம்,மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழாவில்தான் அவர் அப்படி பேசினார். அத்தோடு விட்டாரில்லை! அதகளப்படுத்தி விட்டார்.
“தமிழ்நாட்டில் தமிழ் பேச முடியவில்லை. திராவிட மொழிகளை வைத்துத்தான் இங்கு அரசியல் நடக்கிறது. ஆனால் அந்தந்த மாநிலங்களில் மொழிகளைப் பேசுகிறவர்கள் மத்தியில் முரண்பாடு.கட்டிட வேலைகளுக்காகவும் இதர தொழில்கள் செய்வதற்காகவும் தமிழகம் வருகிற வட மாநிலத்தவரால் ஆபத்து ஏற்படுகிறது.”என்று பேசினார் .
தமிழுக்காக வரிந்து கட்டிப்பேசும் இவர் யுரேகா என்கிற பெயரை வைத்திருக்கிறார். ஒரு இயக்குநர் அன்புடன் சூட்டிய பெயர் என்பதால் அந்த கிரேக்க சொல்லைப் பெயராக வைத்திருக்கிறாராம் .
வாய்ச்சொல்லில் வீரரடி என பாட்டுக்கரசன் என பாடியது இவரைப் பற்றி அல்ல.