இது இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்று ஆக இருக்குமோ?
பொன் .மாணிக்கவேல். சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தற்போது தலைமை அதிகாரி பதவியில் இருப்பவர். என் கவுண்டர் எம்டன்! இவரது பெயரில் திரைப்படம்.
நேமிசந்த் ஜபக் வழங்க, வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம்
இந்த படத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ்,இயக்குநர் மகேந்திரன், “பாகுபலி காளகேயா” பிரபாகர், சுரேஷ் மேனன், முனைவர். கு ஞானசம்மந்தம், சார்லஸ் வினோத், சுதன்ஷூ பாண்டே, முகேஷ் திவாரி, நடிகர் நாகேஷின் பேரன் பீஜேஷ், உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
மதன் கார்க்கி பாடல்களை எழுத , டி இமான் இசையமைக்கிறார்.
ஜி.ஜே.கண்ணன் வசனம் எழுதுகிறார்.நாட்டு நடப்பு கிழிக்கப்படும் என நம்பலாம்.

தயாரிப்பு மேற்பார்வையாளராக ஹக்கிம் சுலைமான் ,
நிர்வாகத் தயாரிப்பாளராக பி..கணேஷ் இருவரும் பணியாற்ற, கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஏ சி முகில் செல்லப்பன்.
” ஐ பி எஸ் போலீஸ் அதிகாரியாக பிரபுதேவா. எல்லாவற்றிலும் நேர்மையாக தன் கடமையை செய்ய நினைக்கும் ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நிகழும் ஒரு சம்பவம் அவரது வாழ்கையை புரட்டிப் போடுகிறது. யதார்த்தமான ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையையும் , அதே சமயம் சமகாலத்தில் நிகழும் முக்கியமான குற்றம் ஒன்றைப் பற்றியும் படம் பேசியிருக்கிறது.
முழுக்க முழுக்க சென்னையில் நடைபெறும் கதை. இந்த கதையை பிரபுதேவா கேட்டு ரொம்பவும் பிடித்துப்போக ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கேரக்டருக்காக ஜிம்முக்கு சென்று தன்னை தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார். பிறகு அவரே தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜபக்கிடம் அனுப்பி கதையைச் சொல்லச் சொன்னார். அவருக்கும் கதை பிடித்து போனது.
அன்பரசி என்ற கேரக்டரில் நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ‘ பிரபாகர், வில்லத்தனம் கலந்த குணசித்திர கேரக்டரில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் மகேந்திரன் இதுவரை ஏற்று நடிக்காத ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.மேலும்,சுரேஷ் மேனன் ஒரு புதுமையான வேடத்தில் நடிக்கிறார்.இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.