” சார் 26 ம் தேதி பாரின் போறார்.சாங் எடுக்குறாங்க. ஏற்கனவே ரெண்டு தடவை பாரின் போறதா சொல்லி மாறிப் போச்சு.ஆனா இந்த தடவை கன்பர்ம்.மத்தபடி அட்லிக்கு படம் பண்ணப்போறதா நீங்க சொல்லித்தான் தெரியிது! சார் யாருக்கு அடுத்த படம் பண்ணப்போறார்ங்கிறது எங்களுக்குத் தெரியாது சார்” நம்ம தலை மீது சத்தியம் அடிக்கிது தளபதி விஜய்யின் நெருங்கிய நட்பு வட்டம்.
அடுத்த படம் யாருக்கு என்பது பற்றி பல செய்திகள் வந்து விட்டன. “ஷங்கர் கதை சொல்லி இருக்கிறார்.அனேகமாக இதுவாகத்தான் இருக்கும்”என ஒரு தகவல் வந்தது.
‘அமீருடன் டிஸ்கஷன் நடந்தது’என இன்னொரு தகவல்.! “அதெல்லாம் இல்லிங்க! மோகன்ராஜாவுக்குத்தான் கன்பர்ம்” என வாக்குறுதியே அளித்தார்கள் ஒரு சாரார்.
“சார் ,சேதி தெரியுமா,தளபதி அடுத்து சிவாஜி பிலிம்ஸ்க்கு படம் பண்ணப்போறார்”.
லேட்டஸ்ட் தகவல் ‘ஏஜிஎஸ்.தயாரிப்புங்க. அட்லிதான் டைரக்சன்!”
ஆனால் இதையும் தளபதி தரப்பு கன்பர்ம் பண்ண வில்லை. “அடுப்பே பத்த வைக்கல.அதுக்குள்ளே இட்லி வெந்துருச்சான்னு கேட்டா எப்படி?”
“தீபாவளி வரை அடுத்த படம் யாருக்கு என்பத தளபதி சொல்ல மாட்டார்னுதான் நினைக்கிறோம். அவரா அறிவிக்கிறவரை இந்த மாதிரி செய்திகள் வரத்தான் செய்யும். ” என்கிறார்கள் தளபதி தரப்பினர்.