சினிமாவில் புற்று நோய் என்பது ஏதாவது ஒரு சாமியினால் குணமாகிவிடும்? ஆனால் நிஜமாகவே கடுமையான புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நடிகையை சாமியா வந்து காப்பாத்தும்? டாக்டர்கள்தான் காப்பாற்றுவார்கள்.
தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் சோனாலி பெந்த்ரேவுக்கு சிகிச்சை ஒரு பக்கம் மகனைப் பற்றிய கவலை மறுபக்கம் என்றாகி விட்டது.
இதுநாள் வரை 12 வயது மகன் ரன்வீரிடம் உண்மையை மறைத்தாகி விட்டது. இனிமேல்தான் கடுமையான சிகிச்சை ஆரம்பம்.இதை எப்படி மகனிடம் சொல்வது?
அம்மாவுக்கு கேன்சர் என்றால் அவன் தாங்குவானா? ஆனால் எப்படியும் சொல்லித்தானே ஆக வேண்டும்? ஆனால் சோனாலியும் கணவரும் பயந்தது போல மகன் துயரில் ஆழ்ந்துவிடவில்லை.
இயல்பாக எடுத்துக் கொண்டிருக்கிறான்.