எத்தனை நாள் கோபமோ! அன்று வசமாக தீர்த்துக்கொண்டார் அஞ்சலி. இவர் வீசிய தோசைக்கல் டைரக்டரின் புருவத்தை கிழித்து தையல் போட வைத்திருக்கிறது.
பிரபல கேமராமேனும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா ஒரு திகில் படம் தயாரித்து வருகிறார். 3 டி.படம்.படத்தின் பெயர் லிசா.இதன் டைரக்டர் ராசு விஸ்வநாத். இவரது புருவம்தான் கிழிந்தது.
காட்சிப்படி தோசைக்கல்லை கேமராவை நோக்கி வீச வேண்டும். அஞ்சலி என்ன நினைத்தாரோ , தெரியவில்லை.அருகில் இருந்த டைரக்டரை நோக்கி வீசிவிட்டார்.நெற்றியில் சரியான காயம். புருவம் கிழிந்து ரத்தம் கொட்டியது. என்ன பண்ண முடியும்? ஆஸ்பத்திரிக்கு போனதில் ஐந்து தையல் போட்டிருக்கிறார்கள்.அன்றைய படப்பிடிப்பு ரத்து.
யாராவது அஞ்சலியிடம் வம்பு வைத்தால் இதுதான் கதி! சந்தடி சாக்கில் எதையும் செய்து விடுவார்.!