இரண்டு நடிகைகள் ஒரே படத்தில் நடித்தால் வம்புதான்! தன்னைவிட அவளுக்கு அதிக இம்பார்ட்டன்ஸ் இருக்குமோ, நம்ம டம்மியாகிடுவாங்களோ என்கிற பயம் வரத்தான் செய்யும். இயக்குனரையும் ஹீரோவையும் படுத்தி எடுத்து விடுவார்கள்.
நம்ம கனவுக்கன்னி கீர்த்தி சுரேஷுக்கும் அதே கவலை.தளபதி விஜய்,சீயான் விக்ரம் ஆகியோருடன்நடித்திருக்கும் கீர்த்தி விஷாலுடன் சண்டக்கோழி 2 லும் நடித்திருக்கிறார், இன்னொரு நடிகை வரலட்சுமி! விஷாலுடன் கிசு கிசு கிசு க்கப்படுகிறவர். இதனால் தன்னை டம்மி ஆக்கி விடுவாங்களோ என்கிற கவலை. ஆனால் விஷாலும் படக்குழுவினரும் அப்படியெல்லாம் இல்ல உங்க கேரக்டர்தான் தூக்கல்னு சொல்லி சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.