நடிகர் சங்கக் கட்டிட விவகாரத்தில் நாளுக்கு நாள் தற்போதைய தலைவர் சரத்குமாருக்கு எதிர்ப்புகள் அதிகமாகி வருகிறது. சமீபத்தில் ராதாரவியின் பாணியை பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடக நடிகர்கள் மத்தியில் ஆதரவு திரட்டினர் விஷால், நாசர் அன்கோவினர். இது சரத்குமார் தரப்பை ரொம்பவே உசுப்பி விட்டுள்ளது. இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’தலைவரை எதிர்க்கவில்லை, ஆனால் சங்கக்கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று அடிக்கடி விஷால் தெரிவித்து வருகிறார். கட்டிடம் கட்ட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கலாம். ஆனால் அது எங்கள் லட்சியம். கட்டிடம் கட்ட போட்ட ஒப்பந்தத்தை அந்த பொதுக்குழுவில் கைதட்டி வரவேற்றவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வழக்குப் போடுகிறார்கள். அவர்களுடன் இணைந்து விஷால் செயல்படுகிறார். இது எந்தவகையில் நியாயம்? நேற்று முன்தினம் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்துக்கு பூச்சிமுருகனை அழைத்து சென்ற விஷாலை, தலைவர் எஸ்.எம்.இசையரசன், செயலாளர் எம்.பி.சுப்பிரமணியன், பொருளாளர் டி.வி.ராஜேந்திரன் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட உரிமை பெற்ற புதுக்கோட்டை உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நடிகர் சங்கத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது போல, அவ்வப்போது பேட்டி கொடுத்துக்கொண்டு உண்மைக்கு புறம்பாக பேசிவருவது வேதனை அளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்த இனியாவது விஷால் இத்தகைய செயல்களில் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். என தன் கண்டன அறிக்கையை பத்திரிகை வாயிலாக வெளியிட்டடார், தொடர்ந்து இன்றும் திருச்சியில்,பத்திரிகையாளர் சந்திப்பில், ‘எனக்கும், நடிகர் விஷாலுக்கும் தனிப்பட்ட முறையில் எவ்வித பிரச்னையும் இல்லை. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து தவறான கருத்துகள் பேசுவது கண்டிக்கத்தக்கது. நடிகர் சங்கத் தலைவராக வர வேண்டும் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கட்டும். அதே நேரம் நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு மீண்டும் நான் போட்டியிடுவேன். அதில் மாற்றமில்லை,” என கூறினார். இதை தொடர்ந்து நாசரும் தன பங்குக்கு பத்திரிகை வாயிலாக சரத்குமாருக்கு கண்டனக் கடிதததை அனுப்பியுள்ளார். இதன் காரணமாக இவ்விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.