விஜயசேதுபதி ஒரு பன்முகக்கலைஞர்.எதையாவது செய்ய வேண்டுமென்பதற்காக வெரைட்டீஸ் கேரக்டர்களை தேடிச் செல்வதில்லை .அதில் வித்தியாசம் இருக்கவேண்டும்.அது மக்களைச் சென்றடையுமா ,மகிழ்விக்குமா என்பதைப் பற்றி ஆய்ந்து முடிவு செய்கிறவர்.அவரது அண்மைப் படைப்புதான் ஜுங்கா .கதையுடன் இணைந்து செல்கிற காமடி என வித்தியாசமான படைப்பு.
இயக்குநர் கோகுலுடன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் சேதுபதி இணைந்திருந்தார். ஜுங்காவில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் டான்! முன்னோட்டத்தைப் பார்க்கிறபோதே நமக்குள் எதிர்பார்ப்பு எகிறுகிறது. பொள்ளாச்சியிலிருந்து பாரீஸ் வரை கதைக்கு கனெக்ஷன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கோகுல்.
சாயிசா போதாது என்று மடோனா செபாஸ்டியனும் இருக்கிறார். காதலுக்கும் களியாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது. ரசிகர்களுக்கு வெள்ளிக்கிழமை அமிர்தயோகம்தான்.நாளை ரிலீஸ்.