இது எங்கே போய் நிக்கும்னு தெரியல. நாளுக்கு நாள் டென்சன் ஏறிக்கிட்டே போகுது. கையில காசு இல்ல, கஷ்டப்படுறேன் என்று சொல்லும் ஸ்ரீ ரெட்டியின் பின்பலம் எந்த புண்ணியவான்னு தெரியல. அடிப்பேன் உதைப்பேன்னு மிரட்டுற அளவுக்கு வந்து நிற்கிறார் ஸ்ரீ ரெட்டி.
ஸ்ரீ ரெட்டியின் அலம்பலைப் பார்த்துப் பொறுக்காத வாராகி என்கிற திரைத்துறை பிரமுகர் பொங்கிப்போய் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார் .”இந்த ஸ்ரீ ரெட்டி கண்டமேனிக்கு புகார் சொல்லிட்டு திரியிது.அந்த பொண்ணே தன்னை தப்பான ஆள்னு சொல்லுது. புடிச்சு உள்ள போடுங்க”ன்னு அந்த புகாரில் சொல்லி இருந்தார்.
கொதித்துப்போன ஸ்ரீ ரெட்டி தனது முக நூலில் வாராகியை துவைத்துப் பிழிந்து காயப்போட்டிருக்கிறார். சற்றும் கண்ணியமின்றி!
“வாராகி நான் உன்னை அறையப்போகிறேன்.தயாராகிக்கொள். அதற்குத் தகுதியான ஆள்தான் நீ! பாதிக்கப்பட்ட எனக்கு மரியாதை கொடுக்க வில்லை,அதற்குப் பதிலாக……” என மிகவும் மட்டமான வார்த்தைப் பிரயோகம். “மலிவான விளம்பரம் தேடுகிறாய் ” என்று முடித்திருக்கிறார்.
இதைப்பற்றி வாராகியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது “விரைவில் வழக்குத் தொடரப்போவதாக “சொன்னார். யாராவது அந்த பூனைக்கு மணியைக் கட்டினால் நல்லது.