தவிர்க்கமுடியாத வில்லனாக வலம் வந்தவர் பிரகாஷ்ராஜ். பக்கா பொறுக்கி முதல் பலே பாரீன் டான் வரை பொருந்திப்போனவர்,மேலும் குண சித்திர நடிகர். பிரதமராச்சே என்கிற அச்சமின்றி மோடியை கடுமையாக வறுத்து எடுத்தவர், தமிழிலும் தெலுங்கிலும் முன்னைப் போல அவரைப் பார்க்க முடியவில்லை.
தெலுங்கில் தேவைப்படுகிற நடிகராக இருந்த அவரை இன்று யாரும் தேடுவதாக இல்லை. சத்யராஜ்,சம்பத்ராஜ்,ஜெயபிரகாஷ் ஆகிய தமிழ் நடிகர்கள் அக்கட பூமியில் கால் வைத்த பிறகு பிரகாஷ்ராஜின் தேவை குறைந்து போனது.
ஒரு நாளைக்கு 5 லட்சம் வீதம் சம்பளம் வாங்கிய பிரகாஷ்ராஜ் தற்போது 3 லட்சம் வீதம் தில் ராசு என்பவரின் படத்திற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
“தில் ராஜ் எனது நெருங்கிய நண்பர் .அவருக்காக இந்த சலுகை” என்கிறார் குணசித்திர நடிகர்.
என்னமா நடிக்கிறாங்கப்பா!