கொட்டுகிற மழை! அனுபவிக்கும் வயசு ஜோடி.! தங்களை மறந்து உதட்டுடன் உதடு பொருத்தி முத்தமிட்டுக்கொண்டனர். அவர்களது அனுமதியின் பேரில் அகமது என்கிற பத்திரிகையாளர் படம் எடுத்தார். எடுத்த படத்தை பத்திரிகை ஆபீசுக்கு அனுப்பினார். ஆசிரியர் குழு அதை கண்டனக் குறிப்புடன் வெளியிட முடிவு செய்தது.
“தப்பு சார்! நான் அனுமதிக்கமாட்டேன்.புனிதமான காதலின் எதிரொலியை கொச்சைப்படுத்த விடமாட்டேன்.அவர்கள் காதலர்கள். டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் முத்தமிடுவது எப்படி தவறாகும்?”என கேட்டு அகமது அந்த படத்தை வாங்கிக் கொண்டார். நிர்வாகம் அவரை வெளியேற்றியது. சில புகைப்படக்காரர்கள் அகமதுவை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்தார்கள். ஆனாலும் அவர் முத்தமிடுவதை ஆதரிக்கவே செய்தார்.
ஏன்யா பங்களாதேசில் முத்தமிடுவது குத்தமாய்யா?