யோகிபாபு இல்லாத படமே இல்லை என்கிற அளவுக்கு எல்லாப் படங்களிலும் நடித்து வருகிறார்.அவரது உச்சரிப்பு ,டைமிங் எல்லாமே தனித்துவம் வாய்ந்தவை. அவரது உடலமைப்பும் அப்படி! அவரை பத்திரிகையாளரும்,நடிகருமான கயல் தேவராஜ் சந்தித்து பேசியபோது திருமணம் பற்றி கேட்டிருக்கிறார்.
“நான் யாரையும் காதலிக்கவில்லை. வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வருசத்தில் கல்யாணம் நடந்து விடும் என எதிர்பார்க்கிறேன் ” என்பதாக பதில் சொல்லி இருக்கிறார். நடக்கட்டும்பா..நல்ல காரியம். மார்க்கெட் இருக்கும்போதே கல்யாணம் நடந்தால்தான் எல்லா ஹீரோக்களும் வருவாங்க!