மெல்லிய உலோகம் சார்ந்த விலை உயர்ந்த சேலையை எந்த புண்ணியவான் நெய்தானோ? சாதாரணமாக அணிய முடியாத இந்த சேலையை கண்காட்சிக்குத்தான் அணிந்து செல்ல முடியும். ஒய்யார நடை நடந்து முடிந்த பின்னர் கழட்டி மடித்து வைத்து விடவேண்டியதுதான்.
அண்மையில் நடந்த ஆடை அலங்கார கண்காட்சி வாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி அணிந்து வந்த அத்தகைய மெட்டாலிக் சேலைக்கு வந்த செம மவுசு! பார்த்தவரெல்லாம் புகழ்ந்து தள்ளவிட்டார்கள்.
அது ஷில்பாவின் கவர்ச்சியால் வந்ததா,அல்லது அந்த சேலையினால் கவர்ச்சி கூடியதா?
கூட்டுங்கப்பா பாப்பையாவின் பட்டி மன்றத்தை!