ஒரு படம் தோல்வினாலே அந்த ஹீரோவுக்கு கட்டம் சரி இல்லாம போகுது ,அடுத்தடுத்து தோல்விய கொடுத்தா? யார் முதுகிலேயாவது ஏறி சவாரி பண்ணினாத்தான் முடியும்! அப்படி ஒரு விதி கோபிசந்த் என்கிற ஆந்திர நடிகருக்கு! உச்ச நடிகர்கள் யாரும் ரிஸ்க் எடுக்கவிரும்பல. கூட்டணி வச்சுக்க மாட்டோம்னுட்டாங்க, எதுக்கு வம்பு? மரத்து மேல ஏர்ற ஓணானை தன் மேல விட்டுக்குவாங்களா?
அடுத்து வலுவான ஹீரோயின் யாராவது கை கொடுத்தால்தான் உண்டு. கீர்த்தி சுரேஷ் பக்கமெல்லாம் நெருங்கக்கூட முடியாது. பிடி காஜல் அகர்வாலை!. அல்லுக்கு உதட்டு முத்தம் கொடுத்த துணிச்சல்காரியை கூப்பிடு என்றார்கள்.
வாய்ப்பே இல்லாமல் வாடி வதங்கிப் போயிருந்தாலும் வலிய தேடி வரும்போது சப்பாணி கூட நிமிருவான்ல.! அப்படி நின்னார் காஜல். ஒன்னரை கோடி கேட்டார். ஒரு வழியா இழுத்துப்புடிச்சு ஒரு கோடியே இருபது லட்சம்னு முடிஞ்சிருக்கு. கோபிசந்த் விதி எப்படி இருக்கோ?