இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு,இன்று சென்னை வந்தார். காவேரி மருத்துவமனை சென்றார். ஐசியு-வில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை நேரில் பார்த்தார். அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் மீன்வளத்துறை ஜெயக்குமார் உள்ளிட்டோரும் சென்றனர். திமுக தலைவர் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேரில் பார்க்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.