“எஞ்சியிருக்கும் நாட்களும் சிறப்பாகத் தமிழுக்கும், தமிழின மக்களுக்கும் -பொதுவாக மக்கட் பணிக்கே பெரிதும் பயன்பட வேண்டும் என்பது என் தணியாத ஆசை.
கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு ‘ஏ, அப்பா! இவ்வளவு தூரம் நடந்து விட்டோமா? இனிமேல் நடக்க முடியாது’ என்று அயர்ந்து போவதற்குப் பதிலாக “பரவாயில்லை! இவ்வளவு தூரம் நடந்து விட்டோம் இன்னும் சிறிது தூரம்தானே”! என்ற புதிய விறு விறுப்பைப் பெற்றாக வேண்டும்..
அந்த விறுவிறுப்பைப் பெறத்தான் என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்துக் கொள்கிறேன்.
வாழ்க்கையை ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்.! எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகி விட்டது..!
போர் வீரனுக்கு மகிழ்ச்சியே கிடையாதா? ஏன் கிடையாது? கொட்டும் குளிரில், பனிப் பாறைகளில் ஊர்ந்து சென்று பகையைத் தாக்கும்போது சூடாக ஒரு கோப்பைத் தேநீர் ,அவனும் அருந்துவது உண்டு.அதுவே அவனுக்குப் பெரிய இன்பம்.!
மீனைச் சுவைத்துச் சாப்பிடும்பொழுது , அதன் முள் நாவிலே குத்தி விடுவது உண்டு. அதனால் சிறிது ரத்தமும் கசிவதுண்டு ! அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மீன் துண்டுகளைச் சுவைப்போரைப் பார்த்திருக்கிறோம்.
சில பேருக்கு மீனின் முள் தொண்டையிலே அடைத்துக் கொண்டு ,அவஸ்தைப்படுவதும் உண்டு.! என் வாழ்வு இதில் இரண்டாவது வகை!”
—–நெஞ்சுக்கு நீதி 4 -ம் பாகத்துக்கு கலைஞர் எழுதிய ‘என்னுரையில் சிறு பகுதி.
( மனோகரா திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்த காட்சியை திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமாருடன் பார்த்து ரசித்தபோது எடுத்த படம். )