பொதுவாக நடிக,நடிகைகளுக்கு சகிப்புத்தன்மை என்பது இஞ்சி மெல்லும் வேலை. “நடிக்கத் தெரியல” என எழுதினால் மறு வினாடியே அப்படி எழுதியவர்களுக்கு மானேஜர் வழியாக ஒரு மிரட்டல் போகும்.!
ஆனால் ஒரு ஆள் ,நடிகையின் டிவிட்டர் கேள்வி பதிலில் டாப்சியின் முகத்துக்கு முகம் பார்க்காத குறையாக ” நீ பாலிவுட்டில் மிகவும் மோசமான முகம் உள்ள அழகற்றவள்.உன் முகத்தை மூணு படங்களுக்கு மேல் பார்க்க முடியாது” என்பதாக சொல்ல ,சற்றும் ஆத்திரப்படவில்லை டாப்சி.!
“என்ன பண்றது? நான் இன்னும் மூணு படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிட்டேனே. மேலும் ரெண்டு படங்கள் கையெழுத்திடப் போறேன். உங்க ஆசை நிறைவேறாமல் போகுதே!” என சொல்லி நாசூக்காக மூக்கில் ரத்தம் வரச் செய்திருக்கிறார். பார்க்க சகிக்காத பங்கரை மூஞ்சி எல்லாம் நடிக்கிறபோது அழகான டாப்சியைப் போய் அழகற்றவள் என்பதாகச் சொன்னவருக்கு பார்வைக் கோளாறு !
வெல்டன் டாப்சி.!