தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அத்திரண்டிகி தாரேதி’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகவுள்ளது. 2013-ம் ஆண்டு தெலுங்கில், திரிவிக்ரம் இயக்கத்தில், பவன்கல்யாண், சமந்தா, ப்ரணிதா, நதியா ஆகியோரது நடிப்பில் வெளியான ‘அத்திரண்டிகி தாரேதி’அங்கு வசூலையும் வாரிக்குவித்தது. ஆந்திர அரசின் 4 நந்தி விருதுகள்உள்பட பல விருதுகளையும் வென்றது.இந்திமற்றும் கன்னடம், பெங்காலி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகாபட நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இப்படத்தின் நாயகன் மற்றும் இயக்குநர் குறித்த தகவலை லைகா பட நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளதாம்.இதில் கார்த்தி உள்படஇரண்டு முன்னணி ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்கிறார்கள்.