For Lawrence master..
Posted by Sri Reddy on Monday, July 30, 2018
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் பலரும் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறினார் இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது . ஸ்ரீ ரெட்டியின் புகார் பட்டியலில் சிக்கியவர்களில் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸும் ஒருவர்.ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு யாரும் பதில் அளிக்காக நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டார்.அதில், ஸ்ரீ ரெட்டி நாம் இருவரும் செய்தியாளர்களை நேரில் சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைக்கிறேன், மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை அவர்கள் முன்பு நீங்கள் நிரூபித்து, இயக்குநராக உங்களது நடிப்பும், நடனமும் என்னை திருப்திபடுத்தினால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். அதற்கான முன்பணத்தையும் உடனே வழங்குகிறேன்” என தெரிவித்திருந்தார்.இந்நிலையில், ராகவா லாரன்ஸின் சவாலை ஏற்பதாக அறிவித்துள்ள ஸ்ரீரெட்டி, தனது முகநூல் பக்கத்தில் இந்நிலையில் ஸ்ரீரெட்டி தற்போது ஒரு கவர்ச்சியான வீடியோ வெளியிட்டுள்ளார். “இது லாரன்ஸ் மாஸ்டருக்காக” என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ இணைய தள ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.இந்த வீடியோவுக்கு கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.