கவுதம் வாசுதேவ மேனன். இண்டஸ்ட்ரியில் நல்ல பெயர் தொடக்கத்தில்! போகப் போக வில்லங்க வாசுதேவ மேனனாக பார்க்க ஆரம்பித்து விட்டது அதே இண்டஸ்ட்ரி ! விதி வலியது. அவரால் தொடர்ந்து நரகாசூரனில் பணியாற்ற முடியாததால் இயக்குநர் கார்த்திக் நரேன் தனது தோளில் மொத்த சுமையை சுமந்து இன்று வெற்றிகரமாக முன்னோட்டத்தை வெளியிட்டுவிட்டார்.
அரவிந்தசாமி,ஷ்ரேயா சரண் ,இந்திரஜித்,சந்தீப் கிஷன் ஆத்மீகா ஆகியோர் நடித்துள்ள நரகாசூரனின் வெள்ளோட்டம் இன்று பிரசாத் லேப்பில் விடப்பட்டது. ஸ்ரேயாவைத் தவிர மற்றவர்கள் வந்து விட்டார்கள்.
“இது கார்த்திக் நரேன் படம்.அவர் கொடுத்த ரோலைத் தாண்டி நாங்கள் எதுவும் செய்யவில்லை”என்பதாக அரவிந்தசாமி பேசினார்.
கவுதம் மேனன் பற்றி இயக்குநர் கார்த்திக் நரேனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
“பேசிக் இன்ஸ்டிங்க்ட் படம் பார்த்து விட்டு கவுதம் மேனன் எனக்கு மெசேஜ் அனுப்பினார். மீட் பண்ணினோம்.அந்த டைம்ல எதுவும் பேசிக்கல. அவரால் தொடர்ந்து பண்ண முடியல.இவ்வளவுதான் சொல்ல முடியும். இன்னும் பேச்சு வார்த்தை போயிட்டிருக்கு”
நல்லது நடக்கட்டும்.