கோல் கையில் இருக்கிறவரைதான் குரங்கு பல்டி அடிக்கும் . குச்சி தொலைந்துவிட்டால் குர்ர்ர்…புர்ர் தான்! அந்த கதையாகிப்போச்சு !
பியார், பிரேமா, காதல் படத்துக்காக மிர்ச்சி சிவா ஒரு புரொமோ வெளியிட்டிருக்கிறார். ட்ரெண்டில் உள்ள நடிகர்களைப் பயன் படுத்தி அத்தகைய புரோமொக்கள் வருவது வழக்கம்தான்.
சிவாவின் படத்தைப் பார்த்த தமிழ்ப்படம் 2 இயக்குநர் சி.எஸ்.அமுதன் கிண்டலாக ஒரு பதிவு போட்டிருந்தார்.
“நான் எவ்வளவோ கேட்டேன்.ஆனா எனக்கு கொடுக்காத நடிப்பை பியார்பிரேமா காதலுக்கு மட்டும் கொடுத்திருக்கிறீர்களே?”
இதாண்டா சான்ஸ் என்று காத்திருந்ததைப்போல சிரித்துக் கொண்டே அமுதன் முகத்தில் குத்து விட்டிருக்கிறார் சிவா.
“அவங்க சொந்தமா கதைய யோசிக்கிறாங்க.படம் பண்றாங்க.நீங்களும் அது மாதிரி ஒர்க் பண்ணுங்க.அப்ப பார்ப்போம்”
“நடிச்சிட்டாலும்னு “சொல்ற அமுதனின் மைன்ட் வாய்சும் கேக்குதா?