நீந்திக் களைத்துக் கரையேறும் சமயத்தில் மறுபடியும் குளத்தில் தள்ளிவிடுவதில் கோலிவுட்காரர்களுக்கு சளைத்தவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். அப்படி தள்ளிவிடப்பட்டவர்கள் முழி பிதுங்கி வாய் பிளந்து கதறுவதை பார்த்து ரசிக்கும் குரூரம் சிலருக்கு !
விஸ்வரூபம்,2 வெளிவரும் தேதி அறிவிக்கப்பட்டு தியேட்டரை நெருங்கும் நேரம் பார்த்து கத்தியை இறக்கியிருக்கிறது பிரமிட் சாய்மீரா.
2008-ல் மர்மயோகி படத்துக்காக பிரமிட் சாய்மீரா நிறுவனத்திடம் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் 4 கோடி கடன் வாங்கியிருந்ததாம். ஆனால் அந்த படத்தில் உன்னைப்போல் ஒருவன் படம் எடுக்கப்பட்டதாம்.மர்மயோகிக்கு கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடி ரூபாயை திருப்பித் தரவேண்டும் .இல்லையேல் விஸ்வரூபம் 2 படத்தைத் தடை விதிக்கவேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.