நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “
அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது.இந்த படத்தை அய் கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்திருப்பவர் ஆர்.உஷா.இதில், கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
வில்லனாக எஸ்.எம்.டிகருணாநிதி அறிமுகமாகிறார்.இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் செ.ஹரிஉத்ரா கூறியதாவது,
“இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ் அதுதான். அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை. இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம்.பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம். அதற்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் ஹீலியம் என்ற புதுவகையான கேமராவில் சி.பி.3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது. என்கிறார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.இப்படத்தின் ஒளிப்பதிவை, வாசு கவனிக்க,நிரோ பிரபாகரன் இசையமைத்து வருகிறார்.