‘பொதுவாக என் மனசு தங்கம்,’ ‘டிக்..டிக்..டிக்.’ஆகிய படங்களில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ் மதுரைப் பொண்ணு.
பிரபு தேவா,விஜய் அண்டனி ஆகியோருடன் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.தெலுங்கிலும் பெத்த பேரு. ஆனாலும் நடிகைகளின் வாழ்க்கை இருக்கே…பெரும் சிரமம்.சான்ஸ் கிடைக்கிறதே அபூர்வம். அங்கபிரதட்சனம் செய்தாலும்…. ஊகும் ஒரு ஆளும் சிபாரிசு இல்லாமல் வாய்ப்பு கொடுக்கிறதில்ல. ஹீரோ,அல்லது டைரக்டர் இவர்களில் யாராவது ஒரு ஆள் “அந்தப் பொண்ணை போடலாம்”னு சொல்லணும். வெறுத்துப் போச்சு நிவேதாவுக்கு!
“சான்சுக்காக கையேந்தி பிச்சை எடுக்கிறதை விட நான் துபாய்க்கே திரும்பிடலாம்னு நினைக்கிறேன்.அங்கேயாவது சந்தோஷமா இருக்கலாம் “என்கிறார் நிவேதா, பிறந்தது மதுரை என்றாலும் வாழ்வது துபாயில்!
நல்லது சகோதரி!