குறி வைத்து சில முன்னணி நடிகர்களை அட்டாக் செய்கிற போக்கை மக்கள் செல்வன் விஜயசேதுபதி கடுமையாக கண்டித்திருக்கிறார். ஊருக்கு இளைத்தவன் அனாதைப் பிள்ளை என்பது மாதிரி தளபதி விஜய் புகை பிடிப்பது மாதிரி சீன் வைத்தால் மட்டும் பொங்கி விடுவார்கள் .அன்புமணியில் இருந்து அல்லக்கை வரை அறிக்கைகள் பறக்கும் .
எந்தப் படத்தில்தான் புகைக்கும்காட்சி இல்லை? சில படங்களில் வளையம் விடுகிறார்களே, அதெல்லாம் தெரிவதில்லையா ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு?
மக்கள் செல்வன் விஜயசேதுபதியிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இதோ……..!
“பழைய படங்களில் சிகரெட் பிடிப்பதை பெருமை என காட்டினார்கள்.அந்தக்காலம் மாறிவிட்டது.முடிந்தவரை புகை பிடிக்கிற காட்சிகளை தவிர்க்கவே செய்கிறோம். படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளை நிறுத்தி விட்டால் மட்டும் போதுமா?திரைப் படத்துடன் ஒவ்வொரு முறையும் அருவருப்பான காட்சியைக் காட்டி விட்டு புகை பிடிக்காதீர்கள் என அறிவிக்கிறோம்.
சினிமாவுக்கு சென்சார் இருக்கு. ஆனால் தொலைக்காட்சியில் காலையிலேயே ஆணுறை,உள்ளாடை விளம்பரங்கள்.இதைப் பற்றிக் கேட்கும் என் மகளுக்கு என்ன சொல்வது?அதென்ன முன்னணி நடிகர்கள் நடித்த காட்சிகளை மட்டும் எதிர்க்கிறீர்கள்? அனைவரையும் கேட்க வேண்டியது தானே?”என்கிறார். இதற்கு என்ன பதில்?