சமூக வலைதளமான டுவிட்டரில், எத்தனையோ நடிகர்,நடிகைகள் இருந்தாலும் எவருக்கும் அஞ்சாமல்,நாட்டின் சமூக,அரசியல் நிகழ்வுகள் குறித்து , தனக்கு தோன்றிய கருத்துகளை பதிவிடுவது நடிகை கஸ்தூரியின் வழக்கம். சில கருத்துகள் புயலை,சர்ச்சையை சந்திக்கும்,சில கருத்துகள் அவரை பாராட்டுக்கும் இட்டுச் செல்லும்.அந்த வகையில் சமீபத்தில், ஐ.ஜி. பொன்மானிக்கவேல் தலைமையிலான தனிப்படை கோவில் சிலை மோசடி விவகாரத்தில் பதுங்கியுள்ளஅரசுத்துறை கருப்பு ஆடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.இந்நிலையில் இது குறித்து கஸ்தூரி தனது டிவிட்டரில் “அரசுத் துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி, திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.அதற்கு ஒருவர்,‘‘நீங்கள் நடித்து வாங்கிய சம்பளத்துக்கு உரிய வருமான வரி செலுத்தி இருக்கிறீர்களா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.அக்கேள்விக்கு பதிலளித்து கஸ்தூரி, நான் வரி ஏய்ச்சதில்லை;என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க ! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் ! #tamizhpadam2 காட்டுறாங்களே, வெயிலு, மழையில கஷ்டப்பட்டு பாடி, ஆடி, கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் !எனக்கூறியுள்ளார். மேலும் ,சமீபத்தில் ஓட்டல் ஒன்றில் பிரியாணி சாப்பிட்டு விட்டு காசுகொடுக்க மறுத்து, அந்த ஓட்டல் காரர்களையே தாக்கிய திமுகவினரை, அக் கட்சியின் செயல் தலைவர் அதிரடியாக கட்சியை விட்டு நீக்கினாரே இதுகுறித்தும் திமுகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை அறிவித்திருக்கும் ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு நன்றி.. அவப்பெயர் என்றால் என்னவெல்லாம் அடங்கும்? குற்றம் செய்வதா இல்லை மாட்டிக்கொள்வது மட்டும்தானா ? புகார் கொடுக்க யாரை அணுக வேண்டும்?என்ற கேள்வியை தனக்கே உரிய ‘பஞ்ச்’சையும் அவர் பதிவிட தவறவில்லை .