125 படங்களுக்கு மேல் யுவன் இசை அமைத்து விட்டார். ஆனால் ‘புதிய கீதை’ படத்துக்குப் பின்னர் தளபதி விஜய் படத்துக்கு இசை அமைக்கவில்லை? எதுவும் வில்லங்கமா?
“அப்படியெல்லாம் எதுவும் இல்லிங்க. என்னுடைய இசை வாழ்க்கையே ‘தீனா’ படத்துக்குப் பின்னர்தான் இடைவெளி இல்லாமல் தொடர்ந்தது.’புதிய கீதை ‘ விஜய்யின் படம். அந்தப் படத்துக்கு பிறகு வாய்ப்புகள் வரல. மத்தபடி எங்களுக்குள் எதுவும் இல்ல. விரைவில் நல்லது நடக்கலாம்” என்கிறார் யுவன் சங்கர் ராஜா.