“நான் விரும்பினால் உத்திர பிரதேசத்துக்கே சி.எம். ஆக முடியும்!அதுவும் எந்த நிமிஷத்திலும்! ஆனா என்னைக் கட்டிப் போட்டுக்க விரும்பல.என்னுடைய சுதந்திரம் முடிஞ்சிரும்” என்று ஹேமமாலினியே டமாரம் அடிக்கும் போது நம்ம ஸ்டார் லீடர்ஸ் மட்டும் ஊழலைப் பத்தியே பேசுறாங்களேன்னு ரசிகன் கவலைப்படுறான். “ஆட்சியைப் பிடிப்போம்னு “சொல்ல மாட்டேங்கிறாங்களேன்னு ஏங்குறான்.
கமல்ஹாசன் பரவாயில்ல. எலக்சன் வரை வந்திருக்கிறார். “ஓட்டுக் கேட்கிறது அவமானம்னு நினைச்சிட்டிருந்தேன்.ஆனா ஓட்டுக் கேட்காமல் இருப்பதுதான் அதை விட பெரிய அவமானம்னு நினைக்கிறேன்” என்று பிரச்சாரம் வரை வந்து இருக்கிறார்..
“நான் வெறும் நடிகனாக மரணிக்க விரும்பவில்லை.நான் மக்களுக்காக உழைத்து சேவை செய்து அவர்களுக்காக மரணிப்பதை விரும்புகிறேன்” என சொல்லியிருப்பதில் ‘ஆட்சியைப் பிடிப்பேன் ‘என்கிற அர்த்தமும் மறைஞ்சிருக்குல்ல!?