நேற்றும் இன்றும் காவேரி மருத்துவமனையில் இருந்து திமுக தலைவர் கலைஞர் உடல் நலம் பற்றிய அறிக்கை வெளியாகவில்லை. இன்று காலையில் முதன்முதலாக கனிமொழி வந்தார். சற்று நேரத்தில் ஸ்டாலின் வந்தார். தொடர்ந்து கலைஞரின் துணைவியார் ராஜாத்தி அம்மையார் வந்தார், ஆ.ராஜா வந்தார் .உதவியாளர் சண்முகநாதன் வந்தார் .இப்படி கலைஞரின் குடும்ப உறவினர்கள் வந்ததால் பரபரப்பு நிலவியது. ஒரு வேளை இன்றே மருத்துவமனையில் இருந்து தலைவர் வீடு திரும்பலாம் என்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால் மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டிருப்பதால் வீட்டுக்கு திரும்புகிற வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.