கத்தியை கொடுத்து காய்கறியை வெட்டுன்னு சொன்னா கழுத்தில கொண்டு போயி வச்சு காலி பண்ண பார்க்கிறீங்களே
மேடம்.?
‘சிவா மனசுல புஷ்பா’..என்கிற டைட்டில்தான் சென்சார் குழுவுக்கு செந்தட்டியாகி அரிப்பை உண்டாக்கி இருக்கிறது. டைட்டிலை மாற்றினால் தான் இந்தப்படம் ரிலீசாகுமாம்
வேறு யாரும் இந்த டைட்டிலுக்கு உரிமை கொண்டாடுகிறார்களா என்றால் அதுவும் இல்லை..ஆனால் அரசியலில் யாரோ எந்த புண்ணியவானையோ குறிப்பதாக சந்தேகப்படுகிறார்கள்.
இந்தப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டியபோது படத்தை பார்த்துவிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில அரசியல்வாதிகள் பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்களாம்.. சில வார்த்தைகளை மியூட் பண்ண சொல்லி இருக்கிறார்கள்..
ஆனால் எதிர்பாராத இடியாக டெல்லியில் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும், படத்தின் மைய கேரக்டர்களான சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.
இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
தொடர்ந்து சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கவுதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இந்தப்படத்தை பார்த்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கவுதமி, டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி வலியுறுத்தியதாக சொல்லப் படுகிறது.
இயக்குனர் வாராகி என்பவர் , கவுதமியிடம் அதற்கான விளக்கம் கேட்டபோது, படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறியுள்ளார் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினாராம். அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ்வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் சொன்னதாகத் தெரிகிறது.
“அதை என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள். என்று கேட்டதற்கு கவுதமி மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதையடுத்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதற்கும் தயாராகி வருகிறார் இயக்குனர்
—