இன்னும் சற்று நேரத்தில் 10 மணி அளவில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது.
காவேரி மருத்துவமனை செல்லும் சாலையை போலீஸ் மூடி விட்டது..வாகனங்கள் செல்ல அனுமதிக்கப் படவில்லை.
மேலும் முதல்வர் எடப்பாடியை துரைமுருகன் சந்திக்கச்செல்வதாக திமுக வட்டத்தில் சொல்கிறார்கள் .அவசரம் அவசரமாக எல்லாமே நடப்பதால் திமுக தொண்டர்கள் மிகவும் கலக்கம் அடைந்து இருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அலர்ட் செய்யப் பட்டிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, போலீஸ்படை குவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையைச் சுற்றி பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்து விட்டார்கள், அமைச்சர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள்.