கடற்கரை அண்ணா நினைவு இடத்தில் கலைஞருக்கு இடம் தர எடப்பாடி அரசு மறுத்ததை தொடர்ந்து திமுக சார்பில் அவசர வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.அதை நீதிபதி குலுவாடி ரமேஷ் விசாரிக்கிறார்,இன்று இரவு 10.30 மணிக்கு விசாரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். வழக்கு இருப்பதாக காரணம் சொன்ன தமிழக அரசுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை இந்த வழக்கு ஏற்படுத்தி இருக்கிறது. யார் வழக்குத் தொடர்ந்தாரோ அவரே வழக்கினை திரும்பப்பெறுவதாக அறிவித்ததுடன் வழக்கின் நோக்கத்தையும் சொல்ல இருப்பதால் அதற்கு அரசு பதில் சொல்ல வேண்டியதிருக்கிறது. அண்ணா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள இடம் மானுமெண்டல் இடத்துக்கு உட்பட்டதாக இருப்பது திமுகவுக்கு சாதகம்.