எங்கேயிருந்துதான் ஐடியாக்கள் வருமோ?
காலமெல்லாம் சும்மாயிருந்து விட்டு இடுப்பு வலி எடுத்து பிரசவத்துக்குப் போகும்போதுதான் கடனா வாங்குன கருப்பட்டி வட்டைத் திருப்பித்தாடின்னு பக்கத்து வீட்டுக்காரி மல்லுக்கு நின்னாளாம்.! ஏறத்தாழ உலகநாயகன் கதையும் இதுதான்!
விஸ்வரூபம் 2 ரிலீசாகப் போகுது என்று அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அப்படத்துக்கு தடை கோரும் மனு தாக்கல் ஆகுது.
“மர்மயோகி படத்துக்கான ஆரம்பகட்ட வேலைகளுக்கே 4 கோடி செலவாகி விட்டது.படத்தை எடுக்க பிரமிட் சாய் மீரா நிறுவனத்தால் மேற்கொண்டு பணம் தரமுடியவில்லை. மரம்யோகி படத்துக்கு வேறு ஒரு தயாரிப்பாளர் கிடைத்ததும் அந்த பணத்தைத் திருப்பித் தருவேன் “என்று உலகநாயகன் கமல்ஹாசன் தரப்பில் சொல்லப்பட்டது. இதனால் தடை கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.