கலைஞர் கருணாநிதியின் மறைவு சின்னஞ்சிறு பிள்ளைகளைக்கூட கடுமையாகப் பாதித்திருக்கிறது.
கலைஞரின் இறுதி யாத்திரையை கலங்கிய கண்களுடன் பார்த்த அந்த நடிகரின் பிள்ளைகள் கலைஞர் ராஜ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்வரை பார்த்தார்கள். அப்படியே தொலைக் காட்சியுடன் ஒன்றிப் போனார்கள். அயான், ஆரவ் இருவரும் உடன்பிறப்புகள். ராணுவவீரர்கள் துப்பாக்கியை உயர்த்திப்பிடித்து வானத்தை நோக்கி சுட்டனர். அத்தனை தமிழர்களும் நெஞ்சு நிமிர்த்தி சல்யூட் அடித்ததைப் பார்த்த அந்த அரும்புகளுக்கும் உணர்வு பிறந்து விட்டது .அவர்களை அறியாமலேயே சோபாவை விட்டு எழுந்து “தமிழ்த் தாத்தாவுக்கு ‘சல்யூட்” என சொல்லி தங்களின் மரியாதையை செலுத்தினர்.
அவர்கள் ஜெயம் ரவியின் செல்லப்பிள்ளைகள்.எடிட்டர் மோகனின் பேரப்பிள்ளைகள்.!