உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வருடங்களுக்குமுன்பு ‘தலைவன் இருக்கின்றான்’. என்ற பெயரில் கதை,திரைக்கதை வசனம் எழுதி வைத்திருந்தார். ‘. இந்த படத்தை முதலில் ,தமிழில் எடுக்க நினைத்த கமல்ஹாசன், பல்வேறு காரணங்களால் இப்படத் தயாரிப்பை ஒத்தி வைத்தார். தற்போது இந்த படத்தை ‘அமர் ஹெய்ன்’என்ற பெயரில் இந்தியில் எடுக்க அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.ஷோலே மாதிரியான மல்டி ஸ்டாரர் திரைப்படமாக அமையவுள்ள இந்த படத்தில் சயீப் அலிகான் ஹீரோவாகவும், கமல்ஹாசன் வில்லனாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அரசியல், அண்டர்கிரவுண்ட் தாதா, கருப்புப்பணம் ஆகியவை நிறைந்த ஒரு த்ரில் படமாக இந்த படம் அமையவுள்ளது .
‘தூங்காவனம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் கமல் ஹாசன் ‘அமர் ஹெய்ன்’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் இந்த படம் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டின் திரைப்படமான ‘தி அன்டச்சபிள்ஸ்’ என்ற படத்திற்கு இணையான த்ரில்லர் படமாக இருக்கும் என்கிறார்கள்