பிக்பாசில் காதலிப்பது , ஈர்ப்பது ,கோபப்படுவது என்பதெல்லாம் சும்மாக்காச்சும் ஏய்த்தல் என்பது பலருக்கும் தெரிஞ்ச விஷயம் தான். மகத் ,முரட்டுக்குத்து நடிகை யாசிகா இருவரும் காதலிக்கிறார்கள், மும்தாஜ் இணைப்புப்பாலமாக வேலை பார்க்கிறார் என்பதெல்லாம் பக்கா நாடகமே.!
மகத்தின் ஒரிஜினல் காதலி பிராச்சியிடம் மகத்துக்கு புது டிரஸ் செட் வாங்கி அனுப்புங்கள் என்று பிக்பாஸ் டீம் கேட்டிருக்கிறது.
“பத்து செட் ஜீன்ஸ்,சர்ட்,ஷூக்கள் என வாங்கிக் கொண்டு போனார். ஒரே மாதத்தில் பிக்பாஸ் டீமிடம் இருந்து கால் வந்தது. புதுத்துணிகள் வேண்டும் வாங்கி அனுப்புங்க என்று !எனக்கு ஷாக்.! துவைத்து துவைத்து போட்டுக் கொள்ளச் சொல்லுங்கள் ! ஒரே நாளில் ஏன் இத்தனை துணிகள் மாற்றவேண்டும்?” என்பதாக பிராச்சி சொல்லியிருக்கிறார்.