“கட்ட முடியுமா , பார்க்கலாம்,கட்டுறதை ?”என்றெல்லாம் ஒரு பக்கம் சவால் இருந்தாலும் கருமமே கண்ணாக இருந்து காரியத்தை முடித்திருக்கிறார்கள் நாசரின் தலைமையில் இயங்கும் நிர்வாகிகள் . முதல் தளம் வரை வந்திருக்கிறார்கள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 38-வது செயற்குழு கூட்டம் தலைவர் .நாசர் தலைமையில் இன்று(12.08 .2018) காலை 10 மணிக்கு நடிகர் சங்க புதிய கட்டிட வளாகத்தில் நடைபெற்றது .மறைந்த முன்னாள் முதல்வரும்,நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர்.மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தபட்டது . மேலும் இக்கூட்டத்தில் சமீபத்தில் இயற்கை சீற்றத்தால் பேரழிவை சந்தித்து வரும் கேரள மக்களுக்கு நடிகர் சஙகம் மூலம் முதல் கட்டமாக ஐந்து லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.