இயக்குநர் மணிரத்னம் , திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் ஜோடியைப் பற்றிய கதையாக ‘ ஓ காதல் கண்மணி’ என்ற படத்தை எடுத்து இருந்தார். ஆனால் சர்ச்சைக்கு இடம் தராமல் இதன் கிளைமாக்சை முடித்து இருந்ததால், இப்படம் பெரும் எதிர்ப்பில் இருந்து தப்பியது, இதில் இளம்ஜோடிகளாக நடிகர் துல்கர் சல்மானும், நடிகை நித்யாமேனனும் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்த இந்தப்படம் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் ஒருசேரக் குவித்தது. விவகாரம் என்னன்னா,இப்படத்தில் நடித்த நித்யாமேனன், ‘திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது தவறல்ல, காலத்திற்கு ஏற்றவாறு பெற்றோரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். திருமணம் செய்து கொள்வதால் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிய நேரலாம், ஆனால் சேர்ந்து வாழும் முறையில் இந்த தவறுகளைத் தவிர்த்திட இயலும். இந்த மாதிரி சேர்ந்து வாழும் போது குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது’ எனத் தனது புரட்சிக் கருத்தை துணிந்து கூறியுள்ளார். இது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிமே இந்த விவகாரம் சிறிது நாட்களுக்கு மீடியாக்களுக்கு நல்ல தீனியா இருக்கும் என்பது உறுதி! நித்யாமேனனுக்கு ஆதரவும் ,எதிர்ப்பும் குவியும் என்பதும் நிச்சயம்!