முன்னெல்லாம் இமான் வந்தால் அவரது பருத்த உருவத்தைப் பார்த்து பிறர் காதில் விழாதபடி கேலி செய்வார்கள்.
அவரது இசை வேண்டுமே என்பதற்காக பகிரங்கமாக சொல்வதில்லை. “உடம்பை குறைங்க சார்”என்று சொன்னால் இசை அமைக்க முடியாது என்று சொல்லி விட்டால்?
வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவானேன்?
அப்போதெல்லாம் அவரின் வெயிட் 115 கிலோ.! ஆனால் ஒரே வருடத்தில் 75 கிலோவாகிவிட்டார். இதற்காக அவர் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார் . இதற்கு அவரது ஆலோசகர் ராஜேஷ்.