“சார் நீங்கள் விஸ்வரூபம் 3 எடுப்பிங்களா ?”
உலகநாயகன் கமல் ஹாசனிடம் கேட்கப்பட்ட கேள்வி. என்ன பதில் சொல்லியிருப்பார் என நினைக்கிறீர்கள்?
“நான் நிஜத்தில் விசுவரூபம் எடுப்பேன்!”
அப்படியானால் அரசியலில் ஜெட் வேகத்தில் பயணிப்பேன் என்பதுதான் அந்த பதிலில் பொதிந்திருக்கிற பொருள்.
“நான் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் படத்துக்காக கற்றுக்கொண்டது சிறிதுதான் என்றாலும் உண்மையில் கற்றதுதான் அதிகம். இந்திய ராணுவத்தில் நமது பங்கு அதிகம் இருக்க வேண்டும். படித்த நமது இளைஞர்கள் அதிகாரிகளாக அதிகம் வரவேண்டும் ” என்பது அவரது பொதுவான கருத்து.