சென்னையை உலுக்கியதைப்போல தற்போது கேரளத்தை உலுக்கி வருகிறது பேரிடர் பெருவெள்ளம். நிலச்சரிவுகள், வீடுகளை வெள்ளம் அடித்துச்செல்லுதல்,அதிகமாக நடந்து வருகிறது. வெள்ளத்துக்குப் பலியானோர் எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.
தமிழ்த்திரைப்பட நடிகர்கள் கமல்ஹாசன்,சூர்யா,விஷால் ஆகியோர் கேரளமுதலமைச்சர் உதவி நிதிக்கு பணம் அனுப்பியுள்ளனர். திமுக ஒரு கோடி கொடுத்திருக்கிறது.
திருவனந்தபுரத்தில் இருக்கிற நடிகர் பிருத்விராஜின் வீடு வெள்ளத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது.சிக்கிக்கொண்ட பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரனை சிலர் காப்பாற்றி இருக்கிறார்கள்.அதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.
கொச்சி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது சனிக்கிழமை வரை நோ விமானப்போக்குவரத்து. கேரளா நடிகர் சங்கம் முழு மூச்சுடன் உதவிகளை செய்து வருகிறது.