ஸ்ரீ தேவி உயிருடன் இருக்கும்போதே அவருக்கு ஒரு படம் பண்ணித் தருவதாக தல அஜித் உறுதி கொடுத்திருந்தார், அதன்பின்னர் விஸ்வாசம் 2 பண்ணவேண்டிய நிர்பந்தம் வந்து விட்டது. அப்போதே அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தை ரீமேக் பண்ணுவது என்பது முடிவாகிய விஷயம்.
இந்த படம் மூன்று பெண்களை சுற்றி நடக்கும் கதையாகும். மூன்று பெண்கள் என்றால் மூன்று ஆண்களும் இருந்தாக வேண்டுமே. இருக்கிறார்கள்.
ஆனால் முக்கியமானவர்கள் அந்த மூன்று பெண்கள்தான். இவர்களுக்காக வாதாடுகிற வேலைதான் அமிதாப் பச்சனுக்கு. ஆனால் தவிர்க்க முடியாத வேடம்.தேசிய விருது பெற்றிருக்கிற படம் பல அவார்டுகள் கிடைத்திருக்கின்றன. அமிதாப் ஏற்ற வேடத்தைத்தான் தல அஜித் ஏற்கவிருக்கிறார். ஜனவரியில் படவேலைகள் ஆரம்பமாகிறது.